close
Choose your channels

சமூக வலைத்தளங்களில் நமீதாவை வறுத்தெடுக்கும் ஓவியா ரசிகர்கள்

Wednesday, August 9, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களில் ஓவியா தவிர கிட்டத்தட்ட மீதி அனைவருக்குமே கெட்ட பெயர்தான் கிடைத்து வருகிறது. ஒருசிலர் பல வருடங்களாக கட்டிக்காத்து வைத்திருந்த நல்ல பெயரை கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் இழந்துவிட்டனர். அவர்களில் ஒருவர் நமீதா என்பதும் உண்மை
அஜித், விஜய் உடன் நடித்த பெரிய நடிகையாக இருந்தாலும், சுத்தம் குறித்து அனைவருக்கும் பாடம் எடுக்கும் நிலையில் இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் அவரது நடவடிக்கை அனைவருக்கும் வெறுப்பை தருவதாகவே இருந்தது. குறிப்பாக ஓவியாவை கார்னர் செய்த கூட்டத்தில் இவரும் ஒருவர். எனவே இவர் மீது ஓவியா ஆர்மியினர் கடும் வெறுப்பில் இருந்தனர்.
இந்த நிலையில் நமீதா தற்போது இமாச்சல பிரதேசத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். 12000 அடி உயரத்தில் உள்ள ரோலா கோஹ்லி என்ற இடத்தில் ஓய்வு எடுத்து வருவதாகவும், உறைந்த பனிப்பிரதேசமான இந்த பகுதியில் இயற்கையின் அழகை ரசித்து வருவதாகவும் நமீதா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
நமீதாவின் பதிவுக்கு ஓவியா ரசிகர்கள் கடுமையான சொற்களால் வறுத்தெடுத்து வகையில் கமெண்ட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். உங்களுடைய மதிப்பை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்றும், ஒருவர் துன்பப்படும்போது அதை பார்த்து சிரிக்கும் கேவலமான குணம் கொண்ட உங்களை இனிமேல் எங்களால் ரசிக்க முடியாது என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் உங்கள் பகுதி அனைத்தையும் பார்த்து நீங்கள் செய்த தவறை உணருங்கள்' என்றும் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment