சினிமாவில் நடிக்க போகிறாரா ஜூலி? சகோதரர் விளக்கம்
Tuesday, August 8, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் இருக்கும் பிக்பாஸ் அரங்கிற்குள் ஓவியா நுழைந்ததும் ஆடியன்ஸ்களின் கைதட்டல் விண்ணை பிளந்தது. கையொலி ஓசை அடங்க ஒருசில நிமிடங்கள் ஆனதை கண்டு கமல்ஹாசனே கொஞ்சம் திகைத்து போனார். ஆனால் அதற்கு நேர்மாறாக ஜூலி அரங்கத்திற்குள் நுழைந்ததும் மருந்துக்கு கூடஒருவர் கூட கைதட்டவில்லை. மேலும் கமல்ஹாசனின் சாதுர்யமான கேள்விகளுக்கு ஆடியன்ஸ் கைதட்டிய போது, தனக்கு கைதட்டியதாக ஜூலி நினைத்து கொண்டது செம காமெடியாக இருந்தது
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜூலி மிகவும் வருத்தத்தில் உள்ளாராம். முதல் நாள் நிகழ்ச்சியில் இருந்து அனைத்து எபிசோட்களையும் பார்த்த ஜூலி, ரொம்பவே வேதனைப்பட்டதாக அவருடைய சகோதரர் ஜோஷ்வா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜூலியின் பெற்றோர்கள் அவர் மீது கோபமாக இருந்ததாகவும், தான் அவர்களை சமாதானப்படுத்தியதாகவும் கூறிய ஜோஷ்வா, இரண்டு மாத ஓய்வுக்கு பின் ஜூலி தனது வழக்கமான நர்ஸ் வேலையை தொடர்வார் என்றும் எந்த காரணத்தை முன்னிட்டும் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் ஜோஷ்வா உறுதிபட கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment