அஜித், விஜய் ரசிகர்களிடம் வசமாக மாட்டிக்கொண்ட காயத்ரி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போதிலும் இன்னும் ஒருசிலர் மீது ரசிகர்களுக்கு ஆத்திரம் தீரவில்லை. குறிப்பாக ஓவியாவின் மனநிலை தடுமாற்றத்திற்கு காரணமான காயத்ரி, ஜூலி, ஆரவ் மீதான கோபம் இன்னும் தீரவில்லை.
இந்த நிலையில் காயத்ரி தேவையில்லாமல் தனது டுவிட்டரில் எதாவது பதிவு போட்டு வாங்கி கட்டிக்கொண்டு வருகிறார். அவர் கொஞ்ச நாளைக்கு அமைதியாக இருப்பது அவருக்கும் ரசிகர்களுக்கும் நல்லது என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் 'மெர்சல்' இசை வெளியீடு குறித்து பதிவு செய்து விஜய் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட காயத்ரி தற்போது 'விவேகம்' படம் பார்க்க தியேட்டருக்கு செல்வதாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு நூற்றுக்கணக்கான கமெண்டுக்கள் பதிவாகியுள்ளது. ஆனால் ஒரு பதிவு கூட பாசிட்டிவ் ஆக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானதால் 'விவேகம்' படம் எப்படி என்று கூட காயத்ரி அடுத்த டுவிட்டை போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் தோன்றிய காயத்ரியை ஆடியன்ஸ் கண்டுகொள்ளவே இல்லை. பரணி வரும்போது எழுந்த கைதட்டல் ஓசை மீதி நால்வருக்கும் கிடைக்கவில்லை என்பது இன்னும் ரசிகர்களின் கோபம் தீரவில்லை என்பதையே காட்டுகிறது.
Vivegam evening show 👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉
— Gayathri Raguramm (@gayathriraguram) August 24, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com