பிக்பாஸ் விக்ரமன் தங்கையா இவர்? செம மாடர்னா இருக்காரே..!

  • IndiaGlitz, [Wednesday,January 25 2023]

சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியின் போது விக்ரமன் பெற்றோர் மற்றும் அவருடைய தங்கை கலந்து கொண்டனர் என்பதும் இந்த நிகழ்ச்சியின் போது பேசிய விக்ரமனின் தங்கை பேச்சு அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே.

பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் தன்னிலை மாறாமல் எனது அண்ணன் இருந்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். பொதுவெளியில் மக்கள் முன் நாம் எது பேசினாலும் நமக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது. அந்த பொறுப்பை மனதில் வைத்துக்கொண்டு விழிப்புணர்வோடு அதே நேரத்தில் தன்னிலை மாறாமல் சுயமரியாதையை இழக்காமல் தன்னுடைய கொள்கைகளை இருந்து ஒரு படி கூட விலகாமல் ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். இப்போது அவர் ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார். அவருடைய தங்கை என்று நான் சொல்லிக் கொள்வதில் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

விக்ரமனை போலவே அவருடைய தங்கையும் ஆக்கபூர்வமாக பேசுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறினார்கள். இந்த நிலையில் விக்ரமன், ‘தனது சகோதரி மிகவும் புத்திசாலித்தனமானவர், அவருடன் பல ஆகப்பூர்வமான விஷயங்களை விவாதித்து உள்ளேன், நான் வியந்து பார்க்கக்கூடிய பெண்களில் எனது தங்கையும் ஒருவர்’ என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் விக்ரமனின் தங்கை தமிழரசியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. குறிப்பாக அவர் மாடன் உடையில் இருப்பதும் அவரது போல்டான குணமும் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.