இது வெறும் நன்றி தெரிவிக்கும் வீடியோ அல்ல.. பிக்பாஸ் விக்ரமனின் முக்கிய அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமனுக்கு இரண்டாவது இடமே கிடைத்தது. இதனால் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் விக்ரமன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள முதல் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: எல்லோருக்கும் வணக்கம்! உங்கள் எல்லோருக்கும் நான் மிகப்பெரிய நன்றியை கூறிக் கொள்கிறேன். நீங்கள் எவ்வளவு சப்போர்ட் என் மீது காண்பித்து உள்ளீர்கள் என்பதை வீட்டிற்கு வந்த பிறகுதான் என்னால் உணர முடிந்தது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மேல் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.
பொங்கல் தினத்தன்று தாய்மார்கள் தங்கள் வீட்டு வாசலில் போட்ட கோலத்தில் ’அறம் வெல்லும்’ என்று போட்டிருக்கிறீர்கள். இதைவிட வெற்றி எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.
ஆனால் இது வெறும் நன்றி சொல்லும் வீடியோ மட்டும் அல்ல, உங்கள் எல்லோரையும் சந்திக்க நான் ஆசைப்படுகிறேன், அந்த நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது, அந்த நிகழ்வு எப்போது என்பதை விரைவில் அறிவிக்கின்றேன், மறுபடியும் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி, அறம் வெல்லும்’ என்று அந்த வீடியோவில் விக்ரமன் கூறியுள்ளார்.
உங்கள் வீட்டுப்பிள்ளையா நினைச்சு ஆதரவு கொடுத்திருக்கீங்க. தன்னெழுச்சியாக வந்த அன்புக்கு மிக்க நன்றி.🙏🏽#அறம்வெல்லும் #AramVellum
— Vikraman R (@RVikraman) January 24, 2023
Will see you soon ❤️ pic.twitter.com/0IAMzmDnnf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments