பிக்பாஸ் செட்டில் நடந்தது எல்லாமே நடிப்பு: தாடி பாலாஜி திடுக் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரிந்திருந்த நடிகர் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகின்றனர். குறிப்பாக நித்யா, தாடி பாலாஜி மீது போலீஸ் புகாரும் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தனது பக்கம் நியாயம் குறித்தும் நித்யாவுக்கும் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கான காரணம் குறித்து இன்று செய்தியாளர்கள் மத்தியில் பாலாஜி கூறியுள்ளார். தனது மனைவி நித்யாவால் தனது குழந்தையின் எதிர்காலம் பாழாவதாகவும், நித்யா உதவி ஆய்வாளர் மனோஜுடன் சேர்ந்து தனது குழந்தையின் வாழ்க்கையை சீரழித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தனது மன உளைச்சலுக்கு உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் காரணம் என்றும் போலீசார் இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கம் விஜய் டிவிக்கு இல்லை என்றும், பிக்பாஸ் செட்டில் செய்தது அனைத்துமே நடிப்பு என்றும், பிக்பாஸ் செட்டிலிருந்து வந்த பின்னர் நித்யா தன்னுடன் வாழவில்லை என்றும் பாலாஜி கூறினார்.
இப்பொழுது கூட தனது குழந்தைக்கு என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால் உதவி ஆய்வாளர் மனோஜால் தனது குழந்தைக்கு ஆபத்து இருப்பதாகவும், நித்யா காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தாடி பாலாஜி கூறியுள்ளார்.
தாடி பாலாஜியின் இந்த குற்றச்சாட்டுக்கு நித்யா என்ன விளக்கம் அளிக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Iniya Vaishnavi
Contact at support@indiaglitz.com