பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த வையாபுரி மனைவி
- IndiaGlitz, [Wednesday,September 06 2017]
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஃப்ரீஸ் டாஸ்க் ஓடிக்கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் ஃப்ரீஸ் என்று சொன்னவுடன் பங்கேற்பாளர்கள் எப்படி இருந்தார்களோ அதே நிலையில் அசையாமல் மறு அறிவிப்பு வரும் வரை இருக்க வேண்டும்
இந்த நிலையில் இன்றைய புரமோ வீடியோவில் அதேபோன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் ஃப்ரீஸ் என்று சொன்னதும் அனைவரும் ஆடாமல் அசையாமல் உள்ளனர்.
அந்த நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வையாபுரியின் மனைவி தனது கணவரை 'வையா..வையா என்று அழைக்க வையாபுரி வேறு வழியின்றி அசையாமல் இருந்தார். பின்னர் அவர் திரும்பி செல்லும்போது அவர் 'என் பொண்டாட்டி...என் பொண்டாட்டி.. என்று புலம்புகிறார். அனேகமாக இன்று இரவு முழுவதும் வையாபுரி தூங்காமல் புலம்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.