சின்மயிக்கு ஆதரவு கொடுத்த பிக்பாஸ் 2 பிரபலம்
- IndiaGlitz, [Thursday,October 11 2018]
பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் சின்மயிக்கு திரையுலகினர் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே நடிகைகள் சமந்தா, வரலட்சுமி, கஸ்தூரி, நடிகர் சித்தார்த், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்ளிட்ட பலர் ஆதரவு கொடுத்துள்ளனர். சின்மயியின் தைரியத்தை பாராட்டிய அவர்கள் நிச்சயம் இந்த விஷயத்தில் நீதி கிடைக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவரான வைஷ்ணவி, தற்போது சின்மயிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் வைஷ்ணவி கூறியபோது, 'நான் சின்மயிக்கு முழு ஆதரவு தருகிறேன். ஒருசிலர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு கொடுக்காமல் குற்றம் செய்தவருக்கு ஆதரவு கொடுப்பது வெட்கக்கேடானது. இன்னொரு பெண்ணுக்கு ஒரு கொடுமை நடந்து கொண்டிருக்கும்போது என்னால் அதை பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது' என்று கூறியுள்ளார்.
திரையுலகில் இருந்து மட்டுமின்றி அனைத்து துறைகளில் இருந்தும் சின்மயிக்கு ஆதரவு குவிந்து வருவதால் 'உண்மையைக் காலம் சொல்லும்' என்று மழுப்பாமல் இந்த குற்றச்சாட்டுக்கு உரிய விளக்கத்தை வைரமுத்து அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
More from the discussion with @ShivAroor. This goes out as support for @Chinmayi because people still don't want to support a woman's claims and instead victim shame/ support the harasser
— Vaishnavi Prasad (@Vaishnavioffl) October 11, 2018
It has happened to me and I will not keep quiet when it happens to another woman. #MeToo pic.twitter.com/hZqlp8wSgM