close
Choose your channels

பிக்பாஸ் 2: இந்த வாரம் வெளியே போவது யார் யார்?

Saturday, September 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் இந்த வாரம் ஆண்ட்டி கிளைமாக்ஸ் ஆக இரண்டு நபர்கள் வெளியேற உள்ளனர். அவர்கள் யாராக இருக்கும்?

அதிகாரபூர்வமற்ற வாக்கு சேகரிப்பின் மூலம் பார்த்தால் இதுவரை ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்றுள்ளனர். இதே ரீதியில்தான் அதிகாரபூர்வ வாக்குகளிலும் கிடைத்திருக்கும். ஆனால் இந்த சீசனில் வாக்குகளுக்குத்தான் மதிப்பில்லையே. பிக்பாஸ் என்ன முடிவு செய்கிறாரோ அவர்தான் ஒவ்வொரு வாரமும் வெளியேறி கொண்டிருக்கின்றார்கள்.

ஐஸ்வர்யா ஜீரோ வாக்குகள் வாங்கியிருந்தால் கூட அவரை பிக்பாஸ் வெளியேற்ற மாட்டார் என்பது தெரிந்துவிட்டதால் அவரை விட்டுவிடுவோம். ஜனனி கோல்டன் டிக்கெட் வைத்திருப்பதால் அவரும் இந்த வாரம் வெளியேற மாட்டார். அடுத்தது யாஷிகாதான். நேற்று வரை நடந்த டாஸ்க்கில் அதிக மதிப்பெண் பெற்றதால் அவருக்கு ரூ.5லட்சம் பரிசு கிடைத்திருக்கின்றது. ஒருவேளை வெளியேறும் முன்னர் அவருக்கு பிக்பாஸ் கொடுத்திருக்கும் பரிசாக இது இருக்கலாம். இதனால் யாஷிகா வெளியேற அதிக வாய்ப்புள்ளது. மேலும் யாஷிகா இல்லாத ஐஸ்வர்யாவின் நிலை எப்படி இருக்கும் என்பதை பார்க்கவும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

ஐஸ்வர்யாவை வெறுப்பெற்றி அவருக்குள் இருக்கும் சந்திரமுகியை வெளியே கொண்டு வருபவர் விஜயலட்சுமி ஒருவர் தான். எனவே ஐஸ்வர்யா வீட்டில் இருக்கும் பட்சத்தில் விஜயலட்சுமியும் இருந்தால் தான் ஃபைனலில் போட்டி கடுமையாக இருக்கும். எனவே விஜயலட்சுமி ஃபைனலுக்கு செல்வது உறுதி போல் தெரிகிறது.

பாலாஜி இந்த வாரமே டாஸ்க்கை ஏனோதானோ என்றுதான் செய்தார். இதனால் பாலாஜிக்கு ஆர்வம் குறைந்துவிட்டதாக தெரிவதால் அவர் வெளியேற வாய்ப்பு அதிகம்.

பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று அதிகம் எதிர்பார்க்கப்படும் நபர் ரித்விகா. கமல்ஹாசனே இவருக்கு பாராட்டு தெரிவித்ததால் இவரை வெளியேற்றும் தவறான முடிவை பிக்பாஸ் எடுக்க மாட்டார் என்றே தெரிகிறது.

எனவே இந்த வாரம் பாலாஜி-யாஷிகா வெளியேறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment