வேண்டியதோர், வேண்டாதோர் இல்லை: சர்ச்சைகளுக்கு பதில் சொல்லும் கமல்

  • IndiaGlitz, [Saturday,July 29 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை முதல் ஒருசில நாட்கள் இது 'ஸ்க்ரிப்ட்தான்' என்று பலர் குற்றஞ்சாட்டி வந்தனர். ஒரு நிலைக்கு மேல் சுவாரஸ்யமாக அனைவரும் நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தவிட்டதால் இந்த 'ஸ்கிரிப்ட்' பிரச்சனை மறந்துவிட்டது.

ஆனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருசிலரை காப்பாற்றும் வகையிலும், ஒரு சிலரை நல்லவராக்க பெரும் முயற்சி செய்து வரும் நிலையும் இருப்பதாக அனைவரும் உணர்வதால் மீண்டும் ஸ்க்ரிப்ட் பிரச்சனை தலைதூக்கியுள்ளது.

காயத்ரியும் ஜூலியும் செய்யும் அட்டகாசங்களை கணக்கில் கொண்டால் ஆர்த்தியும், கஞ்சாகருப்பும் செய்தது தவறே இல்லை என்ற எண்ணத்தோன்றுகிறது. இவர்கள் இருவரையும் வெளியேற்றாமல் ஒவ்வொரு வாரமும் ஓவியாவையே எவிக்சனுக்கு தேர்வு செய்வது நியாயமா/ என்றா கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதுமட்டுமின்றி இருவருக்கும் அடுத்தடுத்து பொறுப்புகளும் அதிகரித்து வருவதை யாராலும் ஜீரணிக்கவும் முடியவில்லை. இந்த நிலையில் நடுநிலைக்கு பெயர் பெற்ற கமல் இருந்தும் இப்படி நிகழ்ச்சி ஒன்சைடாக செல்வது நியாயமா? என்று பலரது கேள்வி எழுந்துள்ள நிலையில் சற்றுமுன் ஒரு புரமோ வீடியோவில் கமல் இதுகுறித்து பேசுகிறார்.

'வேண்டியவர் வேண்டாதார் ஆகும் விந்தை, வேண்டாதவர் வேண்டியர் ஆகும் வேடிக்கை. நமக்கோ வேண்டாதாரும் இல்லை, வேண்டியவரும் இல்லை' என்று கூறியுள்ளார். கமலின் இந்த கூற்று ஓவியா, காயத்ரி, ஜூலி ஆகியோர் இடையே இருந்த விருப்பு வெறுப்புகளை குறிக்கும் வகையில் இருப்பதால் இன்றைய நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.