டைட்டில் வின்னருக்கு தகுதியானவர்தான்: சொன்ன வாக்குறுதியை காப்பாற்றும் அசீம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் வீட்டில் அசீம் குறித்து பல்வேறு எதிர்மறை கருத்துக்கள் தோன்றினாலும் அவர் கடைசி நேரத்தில் பார்வையாளர்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதியின்படி பிக்பாஸ் டைட்டிலை நான் பெற்றால் எனக்கு கிடைக்கும் ஐம்பது லட்சம் பரிசு பணத்தில் சரிபாதியை நான் ஏழை குழந்தைகளின் கல்விகளுக்கு கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வென்று 50 லட்சம் ரூபாயை பெற்றுள்ள அசீம், சற்றுமுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: அன்று சொன்னதுதான், நான் டைட்டில் பட்டம் பெற்றால் பரிசுப்பணம் 50 லட்சம் ரூபாய் தொகையில் 25 லட்சம் ரூபாய் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவ மாணவிகளுக்கு அவர்களுடைய பள்ளிக்கூட கல்விக்கு, தனியாக ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணி கொடுக்கப் போகிறேன். இது குறித்த முழு விவரங்களும் சோசியல் மீடியாவில் போடப்படும், அதை நான் நிச்சயம் செய்து காட்டுவேன்.
நான் பிக்பாஸ் சீசன் சிக்ஸ் டைட்டில் வின்னரான எனக்கு கொடுத்த ஐம்பது லட்சம் ரூபாயில் நேர் பாதி 25 லட்ச ரூபாயை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த என்னுடைய தமிழ் சொந்தங்களுக்கும் தமிழ் உறவுகளுக்கும் கொடுக்க போகிறேன். எத்தனை தடவை நாமினேட் செய்யப்பட்டாலும், அத்தனை தடவையும் என்னை காப்பாற்றி என்னை ஜெயிக்க வைத்த அன்பு உள்ளங்களுக்கு நான் இதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
சொல்லும் செயலும் ஒன்றானாலும் உலகின் தலைசிறந்த சொல் ’செயல்’. நான் என்னுடைய சொல்லை செயல் வடிவத்தில் காட்டப் போகிறேன். கூடிய விரைவில் 25 லட்ச ரூபாய் நான் தனி அக்கவுண்ட் ஓபன் செய்து மக்களிடம் கொடுக்கப் போகிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ‘சொன்ன சொல்லை காப்பாற்றும் அசீம் டைட்டில் வினருக்கு தகுதியானவர்தான்’ என்று கூறி வருகின்றனர்.
As I promised, half of my winning amount ₹25,00,000/- will be contributed to the education of children who lost their parents during Covid-19. 🙏🏼
— MOHAMED AZEEM (@actor_azeem) January 25, 2023
This is just the start of me, giving back to the society the love you gave me. Forever i will be greatefull to all of you 👍🏻 pic.twitter.com/G2lN43xcmc
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments