தர்ஷனின் கனவை நிறைவேற்றிய பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமலஹாசன் தொகுத்து வழங்கிய ’பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியின் வின்னர் ஆகவில்லை என்றாலும் பல கோடி மக்களின் இதயங்களில் இடம் பெற்றவர் தர்ஷன். அதனால்தான் அவருக்கு மேடையிலேயே தனது படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார் கமல்ஹாசன். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்தில் ஹீரோவாக தர்ஷன் நடிக்கவிருப்பதாக கமல்ஹாசன் பிக்பாஸ் மேடையிலேயே அறிவித்து அதற்கான ஒப்பந்தத்தையும் அளித்தார்.
மேலும் ஒரு சில படங்களில் நடிக்க தர்ஷனுக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் தனது அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்யும் பணியில் தர்ஷன் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் இருக்கும் போதும் சரி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் சரி, பிரபல நடிகர் அதர்வா போலவே தர்ஷன் இருப்பதாகவும் இருவரும் இரட்டையர்கள் போல் இருப்பதாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார்.
இதனை அடுத்து நடிகர் அதர்வாவை நேரில் பார்த்து அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தர்ஷனின் கனவாக இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 3 படங்களின் வெற்றி விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட போது அங்கு தற்செயலாக நடிகர் அதர்வாவை சந்தித்த தர்ஷன், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதர்வாவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற தனது கனவு இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று தர்ஷன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com