மருத்துவமனையில் கமல்ஹாசன்.. இந்த வாரம் பிக்பாஸை தொகுத்து வழங்குவது யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலக நாயகன் கமல்ஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஐந்து சீசன்கள் ஆக தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் 6வது சீசன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று திடீரென கமல்ஹாசன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது உடல் நலம் தேறி வருவதாகவும் இன்னும் ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வார சனி, ஞாயிறு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு இன்று இரவு நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் கமல்ஹாசன் உடல்நல குறைவாக இருந்தபோது ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது தெரிந்ததே. அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கமல்ஹாசனுக்கு பதிலாக சிம்பு ஒரு சில நாட்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ரம்யாகிருஷ்ணனா? அல்லது சிம்புவா?அல்லது வேறு யாராவது தொகுத்து வழங்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒருவேளை கமல்ஹாசனே மருத்துவமனையில் இருந்து தொகுத்து வழங்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout