நீ ஒரு அட்டைக்கத்தி, ஸ்ட்ராங் பிளேயர் எல்லாம் இல்லை.. வறுத்தெடுத்த விக்ரமன்!

நீங்கள் ஒரு அட்டைக்கத்தி போட்டியாளர் என்றும் ஸ்ட்ராங்கான போட்டியாளர் இல்லை என்றும் நேருக்கு நேராக விக்ரமன் ஆவேசமாக கூறும் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் அசீமின் நடவடிக்கைகள் எல்லை மீறி போவதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே இரண்டு முறை கமல்ஹாசனே நேரடியாக அசீமை எச்சரித்தும் திருந்தாமல் மீண்டும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக இந்த வாரம் நடந்த டாஸ்க்கில் அடிதடியில் இறங்கியது சக போட்டியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றும் போட்டியாளர்கள் மத்தியில் பேசும் விக்ரமன், ‘அசீம் கை வைத்தது மிகவும் மோசமான ஒரு செயல் என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து பேச வந்த அசீம், நான் ஒரு ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்பதால் என்னை தாக்குவதன் மூலம் நீங்கள் பிரபலமாகலாம் என்று நினைக்கிறீர்கள் என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த விக்ரமன், ‘நீங்கள் ஒரு அட்டகத்தி என்பது எல்லாருக்கும் தெரியும். நீங்கள் ஸ்ட்ராங்கான போட்டியாளர் எல்லாம் இல்லை என பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

பூஜா ஹெக்டேவின் அடுத்த பட டிரைலர்.. செம கலர்புல் என ரசிகர்கள் பாராட்டு!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே தளபதி விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பூஜா ஹெக்டே நடித்த பாலிவுட்

ஷிவானி நாராயணன் அம்மாவுடன் செல்பி எடுத்த பாலாஜி முருகதாஸ். என்ன விசேஷம்?

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் 4 போட்டியாளரான ஷிவானி நாராயணன் மற்றும் அவருடைய அம்மாவுடன் எடுத்த செல்பி

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான்.. அதிருப்தியில் ஆர்மி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் உள்ள போட்டியாளர் ஒருவர் குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.

114 கிமீ வேகத்தில் பைக்கில் சென்ற சென்னை இளைஞர்களின் பரிதாப முடிவு!

இன்றைய தலைமுறையினர் பைக்கில் மிக வேகமாக செல்வதை ஒரு ஃபேஷனாக வைத்திருக்கிறார்கள் என்பதும் அதனால் ஏற்படும் ஆபத்துகளினால் அவர்களுடைய உயிருக்கு மட்டுமின்றி சாலையில்

தமிழ் படத்தின் ரீமேக்கில் அபிஷேக் பச்சன்.. 71 வயது முதியவராக நடிக்கின்றாரா?

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தமிழ் படத்தின் ரீமேக் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.