இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்க்.. யார் யார் உள்ளே வந்திருக்காங்க பாருங்க!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தருவார்கள் என்பதும் அந்த வாரம் முழுவதுமே உணர்ச்சி மயமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே .

அந்த வகையில் மிகவும் எதிர்பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தரும் நிகழ்வு இந்த வாரம் நடைபெறும் என்ற அறிவிப்பை பிக்பாஸ் தெரிவித்தவுடன் போட்டியாளர்கள் மகிழ்ச்சியை துள்ளி குதித்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த வாரத்தில் மைனாவின் கணவர் மற்றும் குழந்தை, கதிரவனின் அம்மா, ஷிவின் உறவினர், அமுதவாணன் குடும்பத்தினர், விக்ரமன் குடும்பத்தினர் உள்பட பிக்பாஸ் போட்டியாளர்களின் அனைத்து உறவினர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தரும் காட்சிகள் இன்றைய முதல் புரமோ வீடியோவில் உள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர் வருகை குறித்த காட்சிகள் ஒரே உணர்ச்சி பிழம்பாக உள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் சென்டிமென்ட் வாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.