என்னது விக்ரமனை நாமினேட் பண்ணலையா?

  • IndiaGlitz, [Monday,January 09 2023]

இந்த சீசனின் கடைசி நாமினேஷன் இன்று நடந்த நிலையில் விக்ரமனை அசீம் நாமினேட் செய்யாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 91 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 92வது நாளாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் இந்த சீசனின் கடைசி நாமினேஷன் இன்று ஓப்பனாக நடைபெறுகிறது.

பிக் பாஸ் வீட்டில் மொத்தம் ஏழு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் அமுதவாணன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டதால் மீதியுள்ள ஆறு போட்டியாளர்கள் நாமினேசன் செய்யப்பட வேண்டும்.

அந்த வகையில் அனைத்து போட்டியாளர்களும் அசீமை நாமினேஷன் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசீம் சக போட்டியாளர்களை மதிக்கவில்லை என்றும், அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் மீது நாமினேட் செய்த போட்டியாளர்கள் குற்றச்சாட்டு கூறினர்.

இந்த நிலையில் அசீம் யாரை நாமினேட் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் விக்ரமனை நாமினேட் செய்யவில்லை என்று கூறினார். இந்த விளையாட்டில் என்னை விட அவர் மிகவும் பொறுமையாகவும் சிறப்பாவும் விளையாடியதால் அவரை நான் நாமினேட் செய்யவில்லை என்று கூறினார். அப்படி என்றால் அசீம் யாரை நாமினேட் செய்தார் என்பதை இன்றைய அடுத்த புரமோ அல்லது இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.