இந்த வார நாமினேஷன் பட்டியல்: யார் யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி 63 நாள் முடிவடைந்து தற்போது 64வது நாள் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அதில் ஒரு போட்டியாளர் இருவரை நாமினேசன் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே.

அதிக போட்டியாளர்களால் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் அந்த வாரம் பட்டியலில் இடம் பெறுவார்கள் என்ற நிலையில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றவர்கள் மணிகண்டன், விக்ரம், ரக்சிதா மற்றும் அசீம் என புரமோ வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது.

மிகவும் ஆச்சரியமாக மணிகண்டன் மற்றும் மைனா ஆகியோர் நெருக்கமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வரும் நிலையில் மணிகண்டனை மைனாவே நாமினேஷன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் அமுதவாணன், விக்ரமன் ஆகியோர்களும் மணிகண்டனை நாமினேட் செய்துள்ளனர்.

மேலும் ரக்சிதா, மணிகண்டன், தனலட்சுமி ஆகியோர் விக்ரமனை நாமினேட் செய்துள்ளனர். ரக்சிதாவை ஏடிகே மற்றும் அசீம் நாமினேட் செய்துள்ளனர். அதேபோல் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறும் அசீமை இந்த வாரம் கதிரவன், ஏடிகே, ஷிவின் மற்றும் மணிகண்டன் ஆகிய நால்வர் நாமினேஷன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய அசீம், ரக்சிதா, மணிகண்டன் மற்றும் விக்ரமன் ஆகியோர்களில் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.