இந்த வாரம் மகத் வெளியேறுவது உறுதியா?

  • IndiaGlitz, [Wednesday,August 22 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எவிக்சன் பட்டியலில் மகத், பாலாஜி, செண்ட்ராயன், மும்தாஜ் ஆகியோர் உள்ளனர். ஐஸ்வர்யாவை பிக்பாஸ் யாஷிகா மூலம் காப்பாற்றிவிட்டதால் அவர் எவிக்சன் பட்டியலில் இருந்து தப்பித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வாரம் மகத் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏனெனில் நேற்று வெளியான நிகழ்ச்சியில் மும்தாஜ், செண்ட்ராயனிடம் கூறும்போது 'ஒரு பெண்ணை மதிக்கக்கூட தெரியாத மகத்துக்கு மக்கள் ஓட்டு போட்டால், இதைவிட கேவலம் எதுவுமில்லை' என்ற ரீதியில் பேசியது ஒளிபரப்பாகிவிட்டது. மகத்தை வெளியேற்ற சேனல் நிர்வாகம் உறுதி செய்துவிட்டதால்தான் இந்த காட்சி ஒளிபரப்பாகியுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே ஐஸ்வர்யாவை பிக்பாஸ் பலமுறை காப்பாற்றியதை பார்வையாளர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்த முறை ஐஸ்வர்யாவுக்கு நெருக்கமான மகத்தையும் காப்பாற்றினால் இந்த நிகழ்ச்சி ஒட்டுமொத்தமாகவே ஸ்கிரிப்ட்தான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். எனவே பார்வையாளர்களை சமாதானப்படுத்த உண்மையான வாக்குகளின் அடிப்படையின் மகத் வெளியேறுவது உறுதி என தெரிகிறது.

ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வரும் மகத் வெளியேறிய பின்னர்தான் மும்தாஜின் உண்மையான சுயரூபம் வெளிப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

More News

விக்ராந்த் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விக்ராந்த் தற்போது 'வெண்ணிலா கபடிக்குழு' மற்றும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார்.

ஒரே நாளில் 3 சமந்தா படங்கள் ரிலீஸ்: தென்னிந்தியாவின் முதல் சாதனை

நடிகை சமந்தா நடித்த மூன்று திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவிருப்பதால் இது தென்னிந்தியாவின் முதல் சாதனையாக கருதப்படுகிறது.

விஷாலுடன் மீண்டும் இணையும் வெற்றிப்பட இயக்குனர்

விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் உருவான 'மதகஜ ராஜா' மற்றும் 'ஆம்பள' ஆகிய படங்களில் 'மதகஜ ராஜா' ஒருசில பிரச்சனைகளால் வெளிவரவில்லை என்றாலும் 'ஆம்பள' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது

முழங்கால் தண்ணீரில் நின்று டீ ஆற்றும் நாயர்: வைரலாகும் வீடியோ

கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வந்த வரலாறு காணாத கனமழையால் கேரள மக்கள் இதுவரை தங்கள் வாழ்நாளில் கண்டிராத பெருந்துன்பத்தை அனுபவித்தனர்.

மீனவர்களுக்கு கண்ணீருடன் நன்றி சொன்ன கேரள மக்கள்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியது.