close
Choose your channels

பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் வெளியேற்றம் யாருக்கு வாய்ப்பு அதிகம்?

Friday, December 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். கடந்த வாரம் மட்டும் ராம் மற்றும் ஆயிஷா இருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுவது யார் என்பது குறித்து தற்போது பார்ப்போம். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்சிதா, மணிகண்டன் ஆகிய 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் மணிகண்டன் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிகண்டனுக்கும் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ரக்சிதாவுக்கும் சுமார் 3 சதவீத வாக்குகள் வித்தியாசம் இருப்பதால் மணிகண்டன் வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதி என்றே கூறப்படுகிறது. 

மேலும் வழக்கம்போல் இந்த வாரமும் அசிம் அதிக வாக்குகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாகவும் விக்ரமன், ஜனனி, ஏடிகே ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த வாரம் மணிகண்டன் குறைந்து வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவாரா அல்லது ஏதேனும் ஆச்சரியம் கலந்த அதிசயம் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.