பிக்பாஸ் சீசன் 6: இந்த இருவரில் ஒருவரா இந்த வாரம் வெளியேறுவது?
- IndiaGlitz, [Wednesday,November 30 2022]
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது தான் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது
இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இதுவரை சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி மற்றும் ராபர்ட் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் கதிரவன், ஜனனி, ரக்சிதா, தனலட்சுமி, மைனா மற்றும் குயின்ஸி ஆகிய ஆறு பேர் நாமினேஷன் பட்டியலில் உள்ள நிலையில் இவர்கள் பெற்ற வாக்குகள் குறித்த தகவல் கசிந்துள்ளது.
குயின்ஸி மற்றும் மைனா ஆகிய இருவரும் மிக குறைந்த வாக்குகள் பெற்று உள்ளதால் இந்த இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக குயின்ஸி வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் தன்னுடைய விளையாட்டு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக வெளியேற்றுங்கள் என்று மைனா சொன்னதையடுத்து அவருக்கு குறைந்த வாக்குகள் கிடைத்து உள்ளதாக தெரிகிறது
மேலும் இந்த வாரம் கதிரவன் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்திலும் ஜனனி, ரக்சிதா, தனலட்சுமி அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.