பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் எவிக்சன் ஆவது இந்த போட்டியாளரா? 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் அசீம், தனலட்சுமி, கதிரவன், ராம், அமுதவாணன், மணிகண்டன் மற்றும் ராபர்ட் ஆகிய 7 பேர் நாமினேஷனில் இருந்தாலும் டேஞ்சர் ஜோனில் அமுதவாணன், ராம், ராபர்ட் மற்றும் மணிகண்டன் ஆகிய நால்வர் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ராபர்ட் மாஸ்டர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர், ரக்சிதாவை ஒருதலையாக காதலித்ததை தவிர வேறு எந்த வேலையையும் உருப்படியாக செய்யவில்லை என பிக் பாஸ் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் தெரிவித்து வந்த நிலையில் இந்த வாரம் அவர் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறியதால் ரக்சிதா இனி ஓரளவுக்கு நிம்மதியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்': ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா!

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாயகனாக நடிக்கும் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படம்

அமீரின் அடுத்த படம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட 'மாநாடு' தயாரிப்பாளர்!

பிரபல இயக்குனர் அமீர் நடிக்கும் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

ராபர்ட்டை சிறையில் தள்ளிய ரக்சிதா .. பழிவாங்கும் முயற்சி தோல்வி

 சமீபத்தில் ராபர்ட் மற்றும் ரக்சிதா சிறையில் இருந்த நிலையில் மீண்டும் ராபர்ட்டை ரக்சிதா சிறையில் தள்ளிய நிலையில் ரக்சிதாவையும் சிறையில் தள்ள ராபர்ட் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 

வாழ்க்கையில் இரண்டாவது முறையாக பழகுகிறேன்.. பூஜா ஹெக்டே வெளியிட்ட வீடியோ!

நடிகை பூஜா ஹெக்டே வாழ்க்கையில் இரண்டாவது முறையாக நடக்க பழகுகிறேன் என வெளியிட்டுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. டிசம்பர் 30ல் ரிலீஸ் என அறிவிப்பு!

கடந்த சில மாதங்களாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பல திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் 'எதற்கும் துணிந்தவன்' 'பீஸ்ட்',