close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Saturday, January 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியின் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் அமுதவாணன் வெற்றி பெற்று முதல் இறுதி போட்டையாளராக தகுதி பெற்றுள்ளார் என்பதும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்படுபவர் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியேந்துள்ளது.

இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறியவர் ரக்சிதா என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரக்சிதா இறுதிப் போட்டியில் பங்குபெறும் நான்கு போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று பலர் எதிர்பார்த்த நிலையில் அவர் இந்த வாரம் வெளியேறுவது நம்ப முடியாததாக உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வாரம் ரக்சிதா வெளியேற்றப்பட்ட நிலையில் அமுதவாணனுடன் மேலும் 3 போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள் என்பதும், அவர்கள் யார் யார் என்ற கேள்விக்கு அனேகமாக அடுத்த வாரம் விடை கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதி போட்டியில் அமுதவாணன், அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment