பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் எவிக்சன் ஆவது இந்த போட்டியாளரா? 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் அசீம், தனலட்சுமி, கதிரவன், ராம், அமுதவாணன், மணிகண்டன் மற்றும் ராபர்ட் ஆகிய 7 பேர் நாமினேஷனில் இருந்தாலும் டேஞ்சர் ஜோனில் அமுதவாணன், ராம், ராபர்ட் மற்றும் மணிகண்டன் ஆகிய நால்வர் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ராபர்ட் மாஸ்டர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர், ரக்சிதாவை ஒருதலையாக காதலித்ததை தவிர வேறு எந்த வேலையையும் உருப்படியாக செய்யவில்லை என பிக் பாஸ் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் தெரிவித்து வந்த நிலையில் இந்த வாரம் அவர் வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறியதால் ரக்சிதா இனி ஓரளவுக்கு நிம்மதியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.