close
Choose your channels

பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா?

Friday, December 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 80 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அந்த நிகழ்ச்சியில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனேகமாக விக்ரமனுக்கு தான் டைட்டில் பட்டம் கிடைக்கும் என்று பலர் கூறி வருகின்றனர் என்றும் ஒரு சிலர் மட்டும் ஷிவினுக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் இந்த வார கேப்டனாக இருக்கும் அமுதவாணன் உள்பட 8 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர் உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ரக்சிதா மட்டுமே நாமினேஷனில் இருந்து இந்த வாரம் தப்பித்து உள்ளார்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் மணிகண்டன் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. மணிகண்டன் கடந்த சிலவாரங்களாகவே குறைந்த வாக்குகள் பெற்று நூலிழையில் தப்பி வந்த நிலையில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து மீதமுள்ள 8 பேர்களில் கிராண்ட் ஃபினாலேவுக்கு செல்லும் நான்கு போட்டியாளர்கள் யார் யார்? அதில் டைட்டில் பட்டம் வெல்பவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment