இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பிய ஒரே போட்டியாளர்: கேப்டனும் சிக்கினார்!

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பதும் அதில் ஒரு போட்டியாளர் இருவரை நாமினேஷன் செய்வார்கள் என்பதும் தெரிந்ததே. ஏற்கனவே இரண்டு முறை ஓபன் நாமினேஷன் நடைபெற்ற நிலையில் நேற்றும் ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது.

இந்த நிலையில் கேப்டன் அமுதவாணன் உள்பட 9 பேர் பிக்பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் நிலையில் ரக்சிதா தவிர அனைவரும் நேற்று நாமினேசன் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் கேப்டன் நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவார் என்ற நிலையில் இந்த வாரம் கேப்டனையும் நாமினேஷன் செய்யலாம் என பிக்பாஸ் அறிவித்ததையடுத்து முதல் நபராக கேப்டன் அமுதவாணனை அசீம் நாமினேட் செய்தார்.

அதன் பின்னர் மணிகண்டனையும் மைனாவையும் விக்ரமன் நாமினேட் செய்தார். ஷிவின் அசீமை நாமினேட் செய்தார். நாமினேஷன் படலம் முடிவுக்கு வந்தபோது பிக்பாஸ் வீட்டில் உள்ள 9 போட்டியாளர்களில் ரக்சிதாவை மட்டுமே யாரும் அனைவரும் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய ஏடிகேன், அமுதவாணன், அசீம், ஷிவின், மணிகண்டன், மைனா நந்தினி, விக்ரமன், கதிரவன் ஆகிய 8 போட்டியாளர்களில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேறப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.