வேற லெவலில் விமர்சித்த ஷிவின்.. எழுந்து நின்று கைதட்டிய அசீம்!

  • IndiaGlitz, [Friday,December 16 2022]

தன்னை வேற லெவலில் விமர்சனம் செய்த ஷிவினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அசீம் எழுந்து நின்று கைதட்டிய வீடியோ இன்றைய அடுத்த புரமோவில் இடம்பெற்றுள்ளது.

மக்களிடத்தில் ரொம்ப சுவாரசியமாக பார்க்க கூடிய இரண்டு போட்டியாளர்கள் யாரென்று பிக்பாஸ் கேள்வி எழுப்பியதை அடுத்து அதற்கு ஒவ்வொருவராக பதில் சொல்லி வருகின்றனர்

முதலில் அமுதவாணனை ஏடிகே சொல்கிறார். அதேபோல் ஷிவின், ரக்சிதா மற்றும் மைனா ஆகியோர்களும் அமுதவாணனை சொல்கின்றனர். அமுதவாணன் வீட்டை கலகலப்பாக வைத்துள்ளதாகவும், அவருடைய காமெடி அவரை எப்போதும் விட்டு போகாது என்றும் மைனா கூறுகிறார்

இதனை அடுத்து இரண்டாவதாக அசீமை தெரிவிக்கின்றனர். மைனா மற்றும் தனலட்சுமி ஆகியோர் அசீமை தெரிவிக்கின்றனர். கேமுக்காகவே அசின் தனது கேரக்டரை மாற்றி விளையாடுவதாக தனலட்சுமி கூறுகிறார்

இதனை அடுத்து பேச வந்த ஷிவின், ‘எல்லோருடைய நோக்கமும் ஒரு குறிப்பிட்ட டாஸ்க்கில் மட்டும் இருக்கும் என்றால் அசீம் இலக்கு மட்டும் கடைசியாக உள்ள ஃபினாலோவை நோக்கி இருக்கும் என்று கூறுகிறார். இதனை அடுத்து அசீம் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு தனது நன்றியை தெரிவிப்பதோடு இன்றைய புரொமோ முடிவு பெறுகிறது.