தயவுசெஞ்சு வெளியே போயிருங்க.. ஷிவினிடம் ஆவேசமாக கூறும் ஏடிகே

மரியாதை இல்லாமல் பேசுவதாக இருந்தால் தயவு செய்து வெளியே போங்கள் என வழக்கறிஞர் கேரக்டரில் நடிக்கும் ஷிவினிடம் நீதிபதி கேரக்டரில் நடிக்கும் ஏடிகே ஆவேசமாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதில் அசீம் மற்றும் ஷிவின் வழக்கறிஞராக நடிக்கின்றனர். ஏடிகே நீதிபதியாக உள்ளார்.

இந்த நிலையில் இன்றைய புரொமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில், ‘ஒரு வக்கீலாக சரியான பாயிண்ட் எடுத்துப் பேச வேண்டியது அவரது கடமை என்று நீதிபதி ஏடிகே கூறினார். இதனை அடுத்து ஷிவின், ‘நான் இப்போது பேசலாமா? என்று கேட்க அதற்கு ’ஜட்ஜ்மெண்ட் முடிந்து போய்விட்டது, இதற்குமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை’ என்று கூறினார்.

ஆனால் தொடர்ந்து ஷிவின் நீதிபதியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோது ஆவேசமாக ஏடிகே, ‘மரியாதை இல்லாமல் பேசுவதாக இருந்தால் தயவு செய்து வெளியே போய் விடுங்கள் எனக் கூறவே ஷிவின் ஆத்திரம் அடைகிறார்.

இதனை அடுத்து ஷிவின், இந்த நீதிமன்றத்தில் நீதி, நியாயத்தை பதிவு செய்ய முடியாது என்றும் கூறி விட்டு வெளியே செல்கிறார். இதனை அடுத்து இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.