ஷிவினுக்கு புரமோஷன் செய்ய சம்பளம் கொடுக்கப்படுகிறதா? உளறி கொட்டிய நண்பர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதையும் தாண்டி இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வெளியே உள்ளவர்கள் புரமோஷன் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு இருப்பதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் தற்போது ஷிவின் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக வெளியே ஒரு கூட்டம் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று விருந்தினராக வந்த நண்பர் ஒருவர் இது குறித்து தகவலை உளறி கொட்டியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு போட்டி என்பதையும் தாண்டி தற்போது டைட்டில் பட்டத்தை ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இணையதளங்களில் ஒரு குரூப் சம்பளம் வாங்கிக்கொண்டு பணி செய்து வருகிறது என்ற வதந்தி கடந்த சில வருடங்களாக பரவி வருகிறது.
இந்த நிலையில் ஷிவினை இன்று பார்க்க வந்த அவரது தோழி மற்றும் நண்பர் அவரிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஷிவினிடம் அவரது தோழி ’நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், நீ நன்றாகத்தான் விளையாடிக் கொண்டிருக்கிறாய், இதே மாதிரி விளையாடினால் போதும் என்று கூறுகிறார்.
அப்போது அவரது நண்பர் ’உனக்காக வேலை செய்வதற்கு இவள் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்’ என்று சொல்ல உடனே சுதாரித்து ’அதை சொல்லாதே’ என்று தோழி கூறியவுடன் பேச்சை மாற்றுகிறார்.
இதில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்காக வெளியே ஒரு குரூப் வேலை செய்கிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
Shivin's friend about getting a salary. Have to agree that the reactions are suspicious.#BiggBossTamil6 pic.twitter.com/F2IAVEt9cu
— Bigg Boss Follower (@BBFollower7) December 27, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments