close
Choose your channels

ராபர்ட் மாஸ்டரின் சகோதரி ஒரு ஐட்டம் டான்ஸரா?

Thursday, November 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டரின் சகோதரி ஒரு ஐட்டம் டான்ஸர் என தெரியவந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர், பிக்பாஸ் வீட்டில் உள்ள வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் ரக்சிதா மீது மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் அவரது ரொமான்ஸ் ஒரு கட்டத்திற்கு மேல் ஓவராக இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டரி சகோதரி தான் நடிகை அல்போன்ஸா என்றும் அவர் பல திரைப்படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி அவர் என்றும் தற்போது தெரியவந்துள்ளது. 

கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ’பஞ்சதந்திரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அல்போன்சா, பல தமிழ் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ம்ர்ர்லும் அல்போன்சா நடிகர் வினோத் என்பவருடன் திருமணமாகாமல் லிவ் இன் உறவு வைத்திருந்த நிலையில் திடீரென வினோத் பணப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. வினோத் பிரிவை தாங்க முடியாமல் அல்போன்சாவும் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் அவரை உறவினர்கள் காப்பாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அல்போன்சா தனது ஒரே மகளுடன் வசித்து வருவதாகவும் தற்போது அவர் திரைப் படங்களில் நடிக்கவில்லை என்றும் தெரிகிறது. இவர் ராபர்ட் மாஸ்டரின் சகோதரி என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment