பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரக்சிதாவுக்கு இத்தனை லட்சம் சம்பளமா?

  • IndiaGlitz, [Monday,January 09 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் நேற்று ரக்சிதா வெளியேறினார் என்பது நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்தவகையில் நேற்று வெளியேறிய ரக்சிதாவின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் அதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கிய ஒருசில நாட்களில் ஜிபி முத்து சொந்த காரணமாக வெளியேறிய நிலையில் அதன் பின்னர் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் என மொத்தம் இதுவரை 13 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டும் இருக்கும் நிலையில் அமுதவாணன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். மீதமுள்ள போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின், அசீம், ஏடிகே, மைனா மற்றும் கதிரவன் ஆகிய 6 போட்டியாளர்களில் 3 பேர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று வெளியேறிய ரக்சிதாவின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ரக்சிதாவுக்கு ஒரு நாளைக்கு ரூ.28,000 சம்பளம் என்று பேசப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் மொத்தம் 91 நாட்கள் இருந்து உள்ளதால் அவர் 25 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

விஜய் டிவி பிரபலத்திற்கு கோல்டன் விசா.. வைரல் புகைப்படங்கள்

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் ஒருவருக்கு ஐக்கிய அரபு நாட்டின் கோல்டன் விசா கிடைத்து உள்ளதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

நீச்சல் குளத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. செம வைரல் புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அவை மிகப் பெரிய அளவில் இணைதளங்களில்

'சற்றுமுன் 'துணிவு' படம் பார்த்தேன்': பிரபலத்தின் சமூக வலைத்தள பதிவு!

சற்றுமுன் 'துணிவு' படத்தை பார்த்ததாக பிரபலம் ஒருவர் சமூக வளைதளத்தில் செய்த பதிவு வைரலாகி வருகிறது. 

'ஜெயிலர்' படத்தில் இணைந்த பிரபல ஸ்டார்.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து ரஜினிகாந்த இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆந்திரா சென்று இருப்பதாக தகவல் .

தமிழ்நாடு- தமிழகம் எது கரெக்ட்? குஷ்பு விளக்கம்

சமீபத்தில் தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைப்பதே சரியானதாக இருக்கும் என தமிழக ஆளுநர் ரவி அவர்கள் தெரிவித்ததற்கு அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.