close
Choose your channels

அசீம்-குயின்ஸி காரசாரமான மோதல்.. விக்ரமன்- ஜனனி பிரச்சனையா?

Thursday, November 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 46 வது நாளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி சூடுபிடித்து உள்ளது என்பதும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்று வரும் நீதிமன்றம் டாஸ்க் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஜனனி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஜனனியின் தமிழில் பிரச்சினை இருப்பதாக விக்ரமன் கூறியதாகவும் அதனால் ஜனனி மனவேதனை அடைந்ததாக ஜனனி சார்பில் வாதாடும் அசீம் நீதிமன்றத்தில் கருத்துகளை எடுத்து வைக்கிறார்.

ஆனால் விக்ரமன், ஜனனி தமிழில் தனக்கு பிரச்சனை இல்லை என்றும் செந்தமிழ் பேசுவது எனக்குமே தடுமாற்றமாக இருந்தது என்று தான் கூறினேன் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் சாட்சி கூண்டுக்கு வரும் ஜனனி, ‘விக்ரமன் தனது தமிழ் மொழி குறித்து கூறியது தனது தனக்கு வருத்தமாக இருந்தது என்று கூற அதற்கு குவின்ஸி மற்றும் விக்ரமின் தரப்பினர் விளக்கம் அளிக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் விக்ரமன் வழக்கறிஞரான குவின்ஸி மற்றும் ஜனனி வழக்கறிஞரான அசீம் ஆகிய இருவரும் காரசாரமாக மோதுகின்றனர். இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக மணிகண்டன் இருக்கும் நிலையில் அவர் என்ன தீர்ப்பு வழங்குவார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment