'என்னது மைனாவுக்கு ஒருநாள் சம்பளம் இவ்வளவா? அவரே சொன்ன தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மைனாவின் சம்பளம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த சீசனில் பிரபலமானவர்கள் பெரிய அளவில் இல்லை என்பதால் போட்டியாளர்களுக்கு சம்பளம் குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மைனா நல்ல பிரபலமானவர் என்பதால் அவருக்கு அதிக சம்பளம் இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
’சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள மைனா, ஒருசில திரைப் படங்களிலும் நடித்துள்ளார். அதனால் அவருக்கு ஒரு நாளுக்கு மைனாவுக்கு அதிகமாக சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் மைனா, மணிகண்டன் மற்றும் தனலட்சுமி ஆகிய மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது மைனாவின் சம்பளம் குறித்த பேச்சு வந்தது. அப்போது மைனாவுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதாக மணிகண்டன் கூறினார். அதைக் கேட்டு தனலட்சுமி வாயைப் பிளந்து ஒன்றரை லட்சமா? என்று கூறுகிறார். அப்படி என்றால் 60 நாளைக்கு 90 லட்சம் அல்லவா வரும் என்று தனலட்சுமிக்கு கூற, ‘ஒரு கோடி வந்தவுடன் நான் வெளியே போய் விடுவேன்’ என்று மைனா கூறுகிறார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மைனாவுக்கு ஒருநாள் இவ்வளவு சம்பளமா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
#Myna ku oru naalaiku 1.5 latchamaa??????#Dhana shocked and we too#Biggbosstamil6 pic.twitter.com/QResalPCfz
— Aadhik Sri (@aadhik_vet09) December 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments