'கிளம்பு கிளம்பு'.. அமுதவாணனிடம் ஆவேசமாக மோதும் மைனா!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 65 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று 66வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் சீசன் 6 இறுதிகட்டத்தை நெருங்கும் நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஆவேசமாக விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் சரியாக செயல்படாத மைனா இன்று சிறையில் இருக்கும் நிலையில் சிறையில் அமுதவாணன் உடன் அவர் மோதல் போக்கை கடைபிடிக்இறார்.
நேற்று எனக்கு செல்லோ டேப் ஒட்டும் போது என் தோள், தொடை மற்றும் கால் வரை போட்டீர்கள். கைக்கும் போட்டீர்கள். ஆனால் இப்போது ஏன் போடவில்லை என அமுதவாணனிடம் அவர் வாதம் செய்கிறார்.
அதற்கு அமுதவாணன் ’என்னுடைய இஷ்டம்’ என்று சொல்ல ’அது எப்படி நீங்கள் முடிவு செய்யலாம்’ என மைனா கேட்க ’நான் தான் முடிவு செய்வேன், அதை கேட்க நீ யார்’ என அமுதவாணன் பதிலடி கொடுக்க, உடனே ஆத்திரமடைந்த மைனா ’கிளம்பு கிளம்பு’ என கூறுகிறார். அதற்கு அமுதவாணன் ‘நீ கிளம்பு; என்று கூறுவதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது.
இதுவரை ஒற்றுமையாக இருந்த மைனா, அமுதவாணன் ஆகிய இருவருக்கும் இடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#Day66 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ctoC5HI9uM
— Vijay Television (@vijaytelevision) December 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com