10 வயது குழந்தைக்கு உரிய பொது அறிவு கூட இல்லையா? வெறுத்துப்போன பிக்பாஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 66வது நாளாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ குறித்து அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் பத்து வயது குழந்தைக்கு கேட்கப்படும் கேள்விகளை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கேட்கப்பட்ட நிலையில் ஒரு போட்டியாளர் கூட சரியான விடையை கூறாததால் பிக்பாஸ் வெறுத்துப்போய் உள்ளதாக தெரிகிறது.

லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கேட்கப்படும் பொதுஅறிவு கேள்விகள் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கேட்கப்பட்டது. தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்ற கேள்விக்கு 18 என மைனா பதில் கூறுகிறார். இந்தியாவின் தேசிய விலங்கு எது என்ற கேள்விக்கு தனலட்சுமி ’சிறுத்தை’ என்று பதில் கூறுகிறார்.

பாரதியார் எழுதிய ஓடி விளையாடு பாப்பா என்ற பாடலின் அடுத்த மூன்று வரிகளை பாடுவதற்கு அசீம் திணறிக்கொண்டிருக்கிறார். ஆத்திச்சூடி பாடலின் முதல் ஐந்து வரிகளை கூற வேண்டும் என்ற கேள்வி கேட்ட நிலையில் விஜய் ஆண்டனியின் ஆத்திச்சூடி பாடலை கதிரவன் பாடுகிறார். இதனை அடுத்து பிக்பாஸ் வெறுத்துப்போய் ’அவ்வையார் எழுதிய ஆத்திசூடி’ என்று கூற கதிரவன் திருதிருவென முழிக்கின்றார்.

10 வயது குழந்தைகள் கூட மிக எளிதாக கூறும் கேள்விகளுக்கு கூட பிக்பாஸ் போட்டியாளர்கள் பதில் தெரியாமல் இருப்பதை பார்த்து பார்வையாளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.