இதை நீங்க எதிர்பார்க்கவே இல்லையில... கதிரவனை பார்க்க வந்த இந்த இளம்பெண் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே ஷிவின், மைனா, அமுதவாணன், ரக்சிதா உள்ளிட்டவர்களின் உறவினர்கள் வந்த நிலையில் மணிகண்டனின் சகோதரியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் நேற்று வந்தார் என்பதும் அவர் இந்த நிகழ்ச்சி குறித்து பாசிட்டிவ்வாக கூறினார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் கதிரவனின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்துள்ளனர். கதிரவனை பார்க்க வந்த இளம் பெண், ‘நான் ஏற்கனவே வெளியே சொல்லிவிட்டு தான் வந்தேன், நான் பிக்பாஸ் வீட்டிற்கு வருவேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று கூறினார். உங்களை பார்த்து ரொம்ப மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

அதன்பின் அவர் கதிரவனுடன் டான்ஸ் ஆடிய வீடியோவும் இன்றைய புரமோ வீடியோவில் உள்ளது. இதனையடுத்து இந்த இளம் பெண் யார்? கதிரவனின் கேர்ள் பிரண்டா? அல்லது காதலியா? என்பது குறித்த விவாதம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கதிரவனை பார்க்க வந்த இந்த இளம் பெண் யார் என்பது குறித்து அவரே விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.