எத்தனை வேஷம் போட்டாலும் உண்மை வெளியே வரும்: பிக்பாஸ் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி 61 நாட்கள் முடிந்து இன்று 62வது நாள் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் எபிசோடு என்பதால் இன்றைய தினம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த சீசனின் முதல் டபுள் எவிக்சன் என்பதால் இந்த வாரம் பரபரப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் முதல் புரோமோ வெளியான நிலையில் அதில் கமலஹாசன் கூறியதாவது: இவர்கள் எத்தனை வேஷம் போட்டாலும் உண்மை முகம் தெரிய ஆரம்பித்து விடுகிறது. இருந்தாலும் அதற்கு பதிலாக இன்னொரு வேஷம் போடுகிறார்கள்.

எத்தனை வேஷம் போட்டாலும் உண்மை பிதுக்கி கொண்டு வெளியே வரத்தான் செய்யும். இவங்களுக்கு இவர்கள் எல்லாம் பிடிக்கும், இவங்களுக்கு இவர்கள் எல்லாம் பிடிக்காது என்ற சார்பு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இம்முறை டபுள் எவிசக்ன் நடக்கப் போகும் நிலையில் இந்த நிலை எப்படி மாறுகிறது என்பதை பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.

இந்த வாரம் டபுள் எவிக்சன் என்பதை கமல் உறுதி செய்த இந்த புரமோ வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராம் மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் வெளியேறி விட்டார்கள் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.