முதல்முறையாக பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கிய கமல்ஹாசன்: நெகிழ்ச்சியான வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஆறு சீசன்களில் முதல் முறையாக கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் கண்கலங்கிய வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த ஆறு சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் அவரது சிறப்பான தொகுப்பினால் தான் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று பிக் பாஸ் போட்டியாளர்களிடம் அம்மா அப்பா குறித்து கருத்து கூறுமாறு கமல்ஹாசன் கேட்கிறார். அப்போது மைனா கூறியபோது, ‘என்னோட அம்மா அப்பா ரெண்டு பேருமே, எனக்கு அம்மா அப்பா கிடையாது என்னுடைய குழந்தைகள் தான். அந்த குழந்தைகளை நான் மிஸ் செய்கிறேன் என்று கூறினார்.

வெளியில் எவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தாலும் உள்ளுக்குள் அந்த ஃபீல் எப்போதுமே இருக்கு என்று அசின் கூறுகிறார். நீங்கள் எனக்கு போட்ட பிச்சையால் தான் நான் இங்கே இருக்கிறேன் என்று கதிரவன் கூறினார்.

அப்போது கமல்ஹாசன், ‘அம்மா அப்பா குறித்து பேசினீர்கள். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. இதை தெளிவாக சொல்லாமலேயே நாம் அவர்களை இழந்து விடுவோம். அப்படி ஒரு குழந்தை தான் நான். எனக்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து உள்ளதை நினைத்து எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்கிறது என்று கமல்ஹாசன் கண்கலங்கி கூறியது பார்வையாளர்களை நெகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

More News

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம்.. அதிகாரபூர்வ அறிவிப்புடன் வெளியான மாஸ் போஸ்டர்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு மாஸ் டைட்டில் போஸ்டரையும்

மந்திரங்களை கட் செய்த ரஜினிகாந்த்.. 'பாபா' ரீரிலீஸ் குறித்து ரசிகர்கள் ரியாக்சன் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான நிலையில் 20 ஆண்டுகள் கழித்து மறுபடியும் எடிட் செய்யப்பட்டு இந்த படம் ரிலீசாகி உள்ளது. அடாத மழையிலும் ரஜினி

நான் சந்தோஷமாக வெளியே வரத்தயார்: கமலிடம் ஜனனி சொன்னது ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் உள்ள குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்பட்டு

'தளபதி 67' படத்தில் நடிக்கின்றேனா? விஷால் கூறிய மாஸ் தகவல்!

விஜய் நடிக்கும் 'தளபதி 67' திரைப்படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன என்பதும் குறிப்பாக இந்த படத்தில் நடிக்க இருக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன

லைகாவின் அடுத்த படத்தில் கங்கனா ரனாவத்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

லைகா நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.