3 பெட்டி 3 சாவி.. கமல் வைத்த வித்தியாசமான டாஸ்க்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 55 நாட்களாக நடந்து வரும் நிலையில் இன்று 56வது எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது என்பதும், இன்றைய கமல்ஹாசன் எபிசோடில் விறுவிறுப்பான காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று குறைந்த வாக்குகள் பெறும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கும் நிலையில் கடைசி மூன்று இடத்தில் உள்ள குயின்ஸி, மைனா மற்றும் ஜனனி ஆகிய மூவருக்கும் கமல்ஹாசன் ஆளுக்கொரு பெட்டியை கொடுக்கிறார்.

இந்த மூவருக்கும் மூன்று பெட்டிகளையும் 3 சாவிகளையும் கொடுக்கும் கமல்ஹாசன் மூவரின் பெட்டியைத் திறக்க சொல்கிறார். இதில் ஒரே ஒரு பெட்டி மட்டும் தான் திறக்கும் என்றும் யாருடைய பெட்டி திறக்கிறதோ அவர் தான் இந்த வாரம் எலிமினேஷன் என்றும் கமலஹாசன் கூறுகிறார்.

இதனை அடுத்து ஜனனி, மைனா மற்றும் குயின்ஸி ஆகிய மூவரும் தங்களை பெட்டியைத் திறக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் குயின்ஸி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்.