நான் சந்தோஷமாக வெளியே வரத்தயார்: கமலிடம் ஜனனி சொன்னது ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் உள்ள குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், மற்றும் குவின்ஸி ஆகியோர் வெளியேறி இருக்கும் நிலையில் இந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஆயிஷா மற்றும் ஜனனி ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறும் நிலையில் இருக்கும்போது இருவரிடமும் கமல்ஹாசன் தங்களது கருத்தை கூறுங்கள் என்று கேட்கிறார். அப்போது ஜனனி, ‘இவ்வளவு நாள் நான் கடின உழைப்பில் தான் இருந்தேன், அப்படி லக்கில் தான் நான் இந்த வீட்டில் இருந்தேன் என்று சொன்னால் நான் சந்தோசமாக வெளியே வர வர தயார் என்று கூறினார்.

அடுத்ததாக ஆயிஷா கூறியபோது, ‘நான் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். கேம் இப்போது கொஞ்சம் கடினமாக போய்க்கொண்டிருக்கிறது நான் வெளியே வர தயாராக தான் இருக்கிறேன்’ என்று கூறினார். இதனை அடுத்து கமல்ஹாசன் இந்த வாரம் வெளியேற இருக்கும் போட்டியாளர் யார் என்பதை கூறுவதோடு இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது.