அசீம் மீது திடீர் பாசம், விக்ரமன் மீது அவ்வளவு வெறுப்பு... தனலட்சுமி வீடியோ
- IndiaGlitz, [Friday,January 06 2023]
பிக்பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு கட்டத்திற்கு வந்து விட்ட நிலையில் தற்போது நிகழ்ச்சியில் உள்ள 8 போட்டியாளர்களில் நான்கு போட்டியாளர்கள் கிராண்ட் ஃபினாலேவுக்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்ட தனலட்சுமி பேட்டி அளித்த நிலையில் அந்த பேட்டியில் அவர் மனம் திறந்து பல கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த கேமுக்கு சரியான நபர் அசீம் தான் என்றும் அவர்தான் இந்த கேமுக்கு பொருத்தமானவர் என்றும் அவருடைய விளையாட்டு தனக்கு மிகவும் பிடித்து இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல விக்ரமன் கேமை கேமாக விளையாடவில்லை என்றும், குறிப்பாக அவர் லட்டர் எழுதியது எல்லாம் கேமே இல்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமி மீது அசீம் ஒரு அபாண்டமான புகார் கூறியபோது கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் தனலட்சுமிக்கு எதிராக குரல் கொடுத்தனர். அப்போது தனலட்சுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே ஒருவர் விக்ரமன் தான். கமல்ஹாசன் மட்டும் குறும்படம் போடாவிட்டால் தனலட்சுமி நிலைமை சிக்கல் ஆகியிருக்கும். அந்த வகையில் தனலட்சுமிக்கு ஆதரவளித்த விக்ரமனையே தனலட்சுமி தற்போது குறைகூறி பேட்டி அளித்திருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவரை இன்னும் சீக்கிரமே வெளியேற்றி இருக்கலாம் என கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
அதேபோல் மணிகண்டனுடன் சண்டை வந்தாலும் தற்போது வெளியே வந்த பிறகு அவருடன் தொடர்பில் இருப்பதாகவும் அவருக்கும் எனக்கும் ஒரு அண்ணன் தங்கை உறவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வெளியே வந்த பிறகு இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு முன் அமுதவாணன், ரக்சிதா, மைனா ஆகியோர்களை நல்ல போட்டியாளர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் என்றும் ஆனால் வெளியே வந்து நிகழ்ச்சியை பார்த்த பிறகுதான் அவர்களது உண்மையான சொரூபம் தருகிறது என்றும் தனலட்சுமி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் போட்டியாளர்களில் தங்களுடைய உண்மையான முகத்தை அமுதவாணன், ரக்சிதா, மைனா காட்டவில்லை என்றும் குறிப்பாக அமுதவாணன் இதில் நம்பர் ஒன் என்றும் தனலட்சுமி கூறியுள்ளார்.
ஜனனி குறித்து தனலட்சுமி கூறியபோது அவருடைய தமிழ், கொஞ்சும் மொழி ஆகியவை நன்றாக இருந்தது. ஆனால் கடைசி ஒரு வாரத்தில் அவர் விளையாடியதை ஆரம்பித்ததிலிருந்து விளையாடி இருந்தால் ஒரு நல்ல போட்டியாளராக இருந்திருப்பார் என்றும் கூறினார்.