இந்த வாரம் வெளியேறிய தனலட்சுமிக்கு இவ்வளவு சம்பளமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 75 நாட்களுக்கு மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது தனலட்சுமி என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் தனலட்சுமி கடந்த சில நாட்களாக அசீம், விக்ரமனுக்கு இணையாக அபாரமாக விளையாடி வந்தாலும் அவ்வப்போது திடீர் திடீரென அவர் சக போட்டியாளர்கள் இடம் கோபம் கொள்கிறார் என்றும் அவரது செயல்கள் சில நேரம் வெறுப்படையச் செய்யும் வகையில் உள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய தனலட்சுமி மிக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதை அடுத்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனலட்சுமிக்கு தினமும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருந்ததாகவும், இதனை அடுத்து அவர் 76 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் அவருக்கு அதில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்கள் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் பிக்பாஸ் கொடுக்கும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் விஜய் டிவி சீரியல், பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி உள்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

அஜய் ஞானமுத்துவின் அடுத்த படம் குறித்த சூப்பர் தகவல்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் அடுத்த படம் குறித்த சூப்பர் தகவல் வெளியாகியுள்ளன.

கிளாமர் உடையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: ஸ்ரேயா சரணின் செம போட்டோஷூட்!

தமிழ் திரை உலகில் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ஸ்ரேயா சரண் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை எடுத்து வருவார்

360 டிகிரி 32 நொடிகள்: அஜித்தின் 'துணிவு' படத்தின் ஆச்சரிய தகவல்!

அஜித் நடித்து முடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் 360 டிகிரி கோணத்தில் 33 நொடிகள் கொண்ட ஸ்டண்ட் காட்சிகளை வித்தியாசமாக

மீண்டும் கமல் படத்தில் இணைகிறாரா மோகன்லால்? பிரபல இயக்குனர் பேச்சுவார்த்தை!

 கமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' என்ற திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் முக்கிய கேரக்டரில் மோகன்லால் நடித்து

கடலில் படுத்து கொண்டே மிதக்கும் தமிழ் நடிகை. வைரல் வீடியோ

தமிழ் நடிகை ஒருவர் கடலில் படுத்துக்கொண்டே மிதந்து கொண்டிருக்கும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது