close
Choose your channels

இந்த வாரம் வெளியேறிய தனலட்சுமிக்கு இவ்வளவு சம்பளமா?

Monday, December 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 75 நாட்களுக்கு மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது தனலட்சுமி என்பது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் தனலட்சுமி கடந்த சில நாட்களாக அசீம், விக்ரமனுக்கு இணையாக அபாரமாக விளையாடி வந்தாலும் அவ்வப்போது திடீர் திடீரென அவர் சக போட்டியாளர்கள் இடம் கோபம் கொள்கிறார் என்றும் அவரது செயல்கள் சில நேரம் வெறுப்படையச் செய்யும் வகையில் உள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய தனலட்சுமி மிக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதை அடுத்து அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனலட்சுமிக்கு தினமும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருந்ததாகவும், இதனை அடுத்து அவர் 76 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் அவருக்கு அதில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில நாட்கள் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் பிக்பாஸ் கொடுக்கும் லட்சக்கணக்கான மதிப்புள்ள பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் விஜய் டிவி சீரியல், பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சி உள்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment