வெளியே விக்ரமனை பற்றிய வீடியோ.. உள்ளே விளக்கும் தனலட்சுமி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இந்த சீசனில் எவிக்சன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்துள்ள நிலையில் தனலட்சுமி தான் வெளியே இந்த நிகழ்ச்சியை பார்த்த வீடியோ குறித்து விக்ரமனிடம் ஒரு சந்தேகத்தை கேட்கிறார்.
அதில், ‘தன்னை ஆரம்பத்தில் இருந்து விக்ரமன் ஆதரித்து வந்ததாகவும் தான் யார் மீது கோபப்பட்டாலும் தனக்கு விக்ரமன் சப்போர்ட் செய்து வந்ததாகவும் ஆனால் அதே கோபம் விக்ரமன் மீது திரும்பிய போது மட்டும் தன்னை அவருக்கு பிடிக்கவில்லை என்றும் தான் பார்த்த வீடியோக்கள் மூலம் தெரிய வந்தது என தனலட்சுமி சந்தேகம் கேட்கிறார்.
அப்போது விக்ரமன், ‘நீங்கள் மற்றவர்களிடம் கோபப்படும்போது ஒரு பொதுவான பிரச்சனைக்காக கோபப்பட்டீர்கள் என்றும் அதனால் உங்களுக்கு நான் சப்போர்ட் செய்தேன் என்றும் ஆனால் என்னிடம் நீங்கள் கோபப்பட்ட போது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினீர்கள் என்றும் அதனால்தான் உங்களை விமர்சனம் செய்தேன், ஆனால் அதே நேரத்தில் நீங்கள் அதை அடுத்த வாரமே திருத்தி கொண்டீர்கள் என்றும் விக்ரமன் விளக்கம் அளிக்கிறார்.
தனலட்சுமி கேட்ட சந்தேகம் மற்றும் விக்ரமன் கொடுத்த விளக்கம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Dhana seeks an explanation from Vikraman (2/2)#BiggBossTamil6 pic.twitter.com/3rktfA3LHO
— Bigg Boss Follower (@BBFollower7) January 12, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com