விக்ரமனுக்கு வழக்கறிஞர் ஆகும் செம போட்டியாளர்: களைகட்டும் கோர்ட் டாஸ்க்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் நீதிமன்ற டாஸ்க் வைக்கப்படுவது வழக்கமான ஒன்று என்றும் இந்த டாஸ்க்கில் காரசாரமாக போட்டியாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக வாதாடுவார்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக் பாஸ் 6வது சீசனில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன் வெளியான  புரமோ வீடியோவில் இந்த வாரம் பிக்பாஸ் நீதிமன்ற டாஸ்க் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவராக கேமரா முன் தங்கள் வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்யவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து விக்ரமன், ஜனனி, அமுதவாணன் ஆகியோர் தங்களது வழக்குகள் குறித்து கேமரா முன் கூறுகின்றனர். விக்ரமன் வழக்கறிஞராக ஷிவின் களம் இறங்குகிறார். அமுதவாணனுக்கு அசீம் வழக்கறிஞராக இருக்கிறார்

இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக ஏடிகே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அசீம் மற்றும் ஷிவின் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக மாறி மாறி வழக்காடும் காட்சிகள், விக்ரமன் கோர்ட்டில் வைக்கும் வாதம் ஆகியவை இன்றைய புரமோவில் உள்ளன. இன்றைய புரமோவே  அசத்தலாக இருப்பதால் இந்த வார டாஸ்க் சுவராஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.