நீதிபதியே சரியில்லை.. அசீம் கூறிய பரபரப்பு குற்றச்சாட்டு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் நீதிபதிகளே தீர்ப்பில் சொதப்புவதும், நீதிபதிகள் மீது வழக்கறிஞர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரமாரியாக குற்றம் கூறி வருவதுமான காமெடி காட்சிகள் நடைபெற்றுவருகின்றன. நீதிபதிகளாக நடிப்பவர்களும் நீதிபதிக்கான மாண்பின்படி செயல்படவில்லை என்பதே பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் இன்று நீதிபதியாக குவின்ஸி இருக்கும் நிலையில் அவரே சரியில்லை என அவரிடமே அசீம் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரம் போட்டியாளர்களில் சிலர் பிளேட்டுகளை ஒழுங்காக கழுவவில்லை என்றும் காபி குடித்த கப்புகளை ஆங்காங்கே வைத்து விடுகிறார்கள் என்றும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நீதிமன்ற டாஸ்க்கில் குயின்ஸி நீதிபதியாகவும், மணிகண்டன் வழக்கறிஞராகவும் இருக்க சாட்சி சொல்ல வந்த ஆயிஷா, ‘ இந்த வாரம் யார் யார் காபி குடித்தீர்களா அவர்கள் உடனடியாக கப்பை கொண்டு வந்து கொடுத்து விடுங்கள் என்று கூறினேன். ஆனால் யாருமே அதனை சரியாக செய்யவில்லை என்று கூறினார்.

இதனை அடுத்து சாட்சியாளராக வந்த அசீம் கூறியபோது, இந்த விஷயத்தில் அனைவருக்கும் ஒரு பொறுப்புணர்ச்சி உள்ளது. ஆனால் நான் தனிப்பட்ட முறையில் குவின்ஸியை நான் பார்த்தபோது அவரே அவர் சாப்பிட்ட பிளேட்டை எடுத்து வைப்பதில்லை என்று குற்றஞ்சாட்டினார். 

இதனை அடுத்து குயின்ஸி, ‘இங்கே ஒருவர் மீது மட்டும் குற்றம் சாட்டக்கூடாது, இது பொதுநல வழக்கு என்பதால் பொதுவான கருத்தை மட்டுமே பேச வேண்டும் என்று கூற, அதற்கு அசீம், ‘நீங்களும் இந்த வீட்டில் பொதுவானவர்களில் ஒருவராக இருக்கிறீர்கள் என்பதால்தான் நான் உங்களையும் சேர்த்து கூறினேன் என்று கூறுவதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது.