close
Choose your channels

திடீரென மூச்சுபேச்சின்றி மயங்கி விழுந்த அசீம்.. நடிப்பா? உண்மையா?

Thursday, December 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அசீம் திடீரென சரிந்து விழுந்து மூச்சு பேச்சின்றி இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அசீம் தற்போது நடைபெற்று வரும் ஏலியன்கள் மற்றும் பழங்குடியினர் டாஸ்க்கில் கொஞ்சம் ஓவராகவே கோபப்படுகிறார் என்றும் அவரை உடனடியாக ரெட்கார்ட் கொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

குறிப்பாக இன்று காலை வெளியான முதலாவது புரமோ வீடியோவில் அமுதவாணனை அடிக்க அசீம் கையை ஓங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சற்று முன் வெளியான இன்னொரு வீடியோவில் அசீம் மற்றும் கதிரவன் ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அசீம் சரிந்து விழுகிறார்.

தலைகுப்புற விழுந்த அசீமை சக போட்டியாளர்கள் தூக்கி தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைக்கின்றனர். உடனடியாக அவர் மெடிக்கல் அறைக்கு அழைத்துச் செல்லும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது. இந்த நிலையில் அசீமுக்கு உடனடியாக மயக்கம் தெளிந்துவிட்டது என்றும் ஆனால் மயக்கம் தெளியாதது போல் நடித்து வருகிறார் என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்து கூறுகின்றனர்.

இந்த வாரம் டாஸ்க்கில் அசீம் ஓவராக நடந்து கொண்டதால் அவர் தனக்கு ரெட் கார்ட் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் மயக்கம் போட்டது போல் நடிக்கிறார் என நெட்டிசன்கள் சிலர் கூறி வருகின்றனர்.

இருப்பினும் உண்மை நிலவரம் என்ன? என்பதை இன்றைய எபிசோடை முழுவதும் பார்த்தால் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோ வீடியோவில் ஒருவரை கை நீட்டி அடிப்பது தவறு என அசீமை மைனா கண்டிக்கும் காட்சிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment