பெண் போட்டியாளரிடம் இந்த சர்ச்சைக்குரிய பொருளையா கேட்டார் அசீம்? வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவு பெற இருக்கும் நிலையில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில் அசீமும் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக எவிக்ட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடன் பல்வேறு உரையாடல்களை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற போட்டியாளர்கள் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் அசல் மற்றும் செரினா போட்டியாளர்களாக இருந்த போது பிக்பாஸ் வீட்டில் நெருக்கமாக இருந்த நிலையில் மீண்டும் அவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கும் போது அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் அசீம், திடீரென ’நீங்கள் அதை கொண்டு வந்திருக்கிறீர்களா? என்று செரினாவிடம் கேட்டார்.
இதை கேட்டு செரீனா திகைப்பு அடைந்த நிலையில் ’நீங்கள் உங்கள் பாய் பிரண்டை பார்க்க வந்திருக்கிறீர்களே, அதனால் தான் இப்படி கேட்டேன்’ என்று அசீம் கூறினார். இந்த நிலையில் அசீம் கேட்டது ‘காண்டம்’ என்று சிலர் கூறினாலும், அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளதால் அவர் உண்மையிலேயே என்ன கேட்டார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அசீம் ‘காண்டம்’ கேட்டிருந்தால் நிச்சயம் செரீனா மற்றும் அசல் கோபப்பட்டு இருப்பார்கள். ஆனால் இருவருமே அசீம் கேட்டதை ஜாலியாக எடுத்து கொண்டதால் அசீம் காண்டம் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்று தான் கருதப்படுகிறது. அப்படி என்றால் அசீம், செரீனாவிடம் என்ன கேட்டிருப்பார் என்பதை யூகித்து கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்யுங்கள்.
#CringeAzeem to #Sherina: got some c_____? You're coming to see your boyfriend, you don't even...#Sherina & #Asal were clearly uncomfortable! Disgusting behaviour by clown in a show that's viewed by millions #BiggbossTamil6 #AramVellum#VaathiVikraman #VoteForVikraman pic.twitter.com/p7jzhRBZRl
— siva (@winsiva1994) January 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout