சும்மா சீன் கிரியேட் பண்ணாத.. அடங்கு.. அசீமிடம் ஆவேசமாக மோதும் போட்டியாளர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி 66 நாள் முடிவடைந்து இன்று 67வது நாள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் மத்தியில் மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக அசிம் உடன் மோதாத போட்டியாளர்களே இல்லை என்ற அளவுக்கு தான் தற்போதைய நிலை உள்ளது.இந்த நிலையில் இன்று வெளியான முதல் புரமோ வீடியோவில் அசீம் உடன் ஏடிகே மோதுகிறார். ஏற்கனவே இருவரும் பலமுறை சண்டை போட்ட நிலையில் இன்று மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்று வரும் சொர்க்கம் நரகம் டாஸ்க் குறித்து அசீம் ஒரு கருத்தையும் சொல்கிறார். அப்போது விக்ரமன் கூறியபோது ’ஷிவின், அசீம் ஆகிய இருவரும் ஏடிகேவுக்கு எமோஷனல் ஸ்டெபிளிட்டி இல்லை என்று கூறி இருக்கிறார்கள் என்று கூறினார். அப்போது ஷிவின் சிரித்துக் கொண்டிருக்கும் போது ஏடிகே கோபப்படுகிறார். தயவு செய்து நீங்கள் சிரிக்காதீர்கள் என்று கூற அப்போது அசீம் குறுக்கிடுகிறார்.
உடனே ஏடிகே, ‘நீங்கள் சும்மா சீன் கிரியேட பண்ண வேண்டாம், அடங்கு’ என்று கூற அதற்கு அசீம், ‘அடங்கு’ என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று கூறுகிறார். அதற்கு ஏடிகே என்னா? என்று ஆத்திரத்துடன் கேட்க விக்ரமன் இருவரையும் சமாதானப்படுத்தி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
#Day67 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/fRJ9pw7YEc
— Vijay Television (@vijaytelevision) December 15, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments