திடீரென பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் கதிரவன். தனலட்சுமி அப்செட்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் மாறிமாறி வழக்குகள் தொடுக்கப்படுவதும், வழக்குகள் தொடர்ந்த மற்றும் தொடுக்கப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்கள் ஆஜராகி வருவதுமான காட்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தற்போது கதிரவன் வீட்டில் இருக்கும் பொருட்கள் சரியாக கழுவவில்லை என்றும் டீ காபி குடித்த கப்புகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது என்றும் வழக்கு தொடுக்க பிக்பாஸ் இடம் அனுமதி கேட்கிறார்.

இந்த வழக்கை கேப்டன் மைனா மீது தொடுக்க முடியாது என்பதால் பொதுநல வழக்காக அனைவர் மீதும் தாக்கல் செய்யுங்கள் என பிக்பாஸ் அறிவுரை கூறுகிறார். இதனையடுத்து இந்த வழக்கை பொதுநல வழக்கு தாக்கல் செய்ய அமுதவணனிடம் கதிரவன் கூறுகிறார். இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களும் இந்த வழக்கில் சம்பந்தப் படுவார்கள் என தெரிகிறது.

இதனை அடுத்து தட்டுகள்,கப்புகள் ஆகியவற்றை சரியாக கழுவி வருபவர்களும் இந்த வழக்கில் ஆஜராக வேண்டுமா? என தனலட்சுமி அப்செட் ஆகிவிடுவதோடு, இதெல்லாம் ஒரு வழக்கா? என கூறுகிறார். இந்த வழக்கு இன்றைய நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'வாரிசு' படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ்.. சிக்கல் மேல் சிக்கல் வருவதால் அதிர்ச்சி

தளபதி விஜய் நடித்த  'வாரிசு' திரைப்படம் தெலுங்கில் வெளியிட அம்மாநில தயாரிப்பாளர்கள் சங்கம் பிரச்சனை செய்த நிலையில் தற்போது தான் அந்த பிரச்சனையை சரி செய்யப்பட்டுள்ளது

பொருட்களை போட்டு உடைத்த குயின்ஸி.. பிக்பாஸ் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

 கதிரவன் மீது இருக்கும் கோபத்தில் குவின்ஸி பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்ததை அடுத்து பிக்பாஸ் அவருக்கு நூதனமான தண்டனை கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்தின் 'துணிவு' படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள்? கசிந்த தகவல்கள்!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இந்த படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறது. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்

அறிவிப்புக்கு முன்னரே ரூ.240 கோடி வியாபாரம் செய்ததா 'தளபதி 67? கோலிவுட்டில் பரபரப்பு!

 ரஜினி, கமல், அஜீத், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கிட்டத்தட்ட வியாபாரம் முடிந்து விடும் என்பது தெரிந்ததே.

'சூர்யா 42' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நாட்டிலா?

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்