சுஜா இன்று வெளியேறுகிறாரா?

  • IndiaGlitz, [Sunday,September 10 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பல புரமோக்கள் திசை திருப்பும் வகையில் இருக்கும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவரை புரமோ வீடியோவில் பில்டப் மட்டுமே அதிகமாக வெளிவந்துள்ள நிலையில் இன்றைய புரமோவில் சுஜா வெளியேறுவது போன்று உள்ளது.

கமல் எல்லோரையும் ஃபிரீஸ் என்று சொல்லி சுஜாவை மட்டும் ரிலீஸ் செய்கிறார். அப்போது சுஜா வழக்கம்போல் ஓவர் ஆக்டிங் செய்து அனைவரிடமும் விடை பெற்று செல்வது போல் இன்றைய புரமோ உள்ளது.

இருப்பினும் இந்த வாரம் எவிக்சன் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது குடும்ப உறுப்பினர்களை பார்த்து நெகிழ்ச்சியுடன் இருக்கும் நிலையில் இந்த வாரமும் அந்த அன்பை பரிமாறி கொள்ள வாய்ப்பு உள்ளது. ஹரீஷூம் இதை ஒரு வேண்டுகோளாக நேற்று வைத்தார். நேற்றைய நிகழ்ச்சியின் இறுதியில் நாளை எவிக்சன் உண்டா? இல்லையா? என்று ஹரீஷ் கேட்டபோது 'பொறுத்திருந்து பாருங்கள்' என்று கமல் கூறியதில் இருந்தே இன்று எவிக்சன் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடாராஜன் வீட்டில் சிபிஐ ரெய்டு

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

'ஸ்பைடர்' இசை வெளியீடு: ஆந்திராவில் இருந்து குவிந்த மகேஷ்பாபு ரசிகர்கள்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆரம்பமாகவுள்ளது.

'களவாணி 2' படத்தில் ஓவியா நடிக்கின்றாரா? விமல் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் உலகப்புகழ் பெற்ற ஓவியாவுக்கு இன்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது ஒரே ஒரு டுவிட்டர் ஸ்டேட்டஸூக்கு லைக்குகள் குவிந்து வருவதில் இருந்தே இதை தெரிந்து கொள்ளலாம்

டெங்கு காய்ச்சலுக்கு பலியான பேங்க் ஆப் அமெரிக்காவின் எம்டி: 

தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதும், இந்த காய்ச்சலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதும் தெரிந்ததே.

100வது நாளில் நிர்வாண போராட்டம்: டெல்லியில் எச்சரிக்கை விடுத்த தமிழக விவசாயிகள்

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் இரண்டாவது கட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.